எனக்கு புத்தக மதிப்புரை எழுத தகுதி இல்லை என்றாலும் நான் படித்ததில் மிகவும் என்னை உணர்ச்சிவசப்படவைத்த புத்தகம் என்பதால் எழுதுகிறேன்.
சி.சு.செல்லப்பா(1912- 1998) பிறந்தது மதுரை மாவட்டம் வத்தலகுண்டு. இவர் சிறுகதை,நாவல்,கவிதை,விமர்சனம் ஆகிய துறைகளில் சிறந்து இயங்கியவர்.
இந்த குறுநாவலை நீங்கள் படிக்கும்பொழுது உங்களை அறியாமல் உங்கள் மனதிற்குள் கைதட்டிக்கொள்வீர்கள். ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் காளைகளை வெளியே அவிழ்த்துவிடும் இடத்திற்கு பெயர்தான் 'வாடிவாசல்' (கிட்டி).
ஜல்லிக்கட்டு பற்றி தமிழில் வெளிவந்த முதல் படைப்பு வாடிவாசல் ஆகும்.இந்த நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் உங்கள் மனதில் நிற்பது உறுதி.காளை முதற்கொண்டு. நீங்கள் இந்த நாவலை படித்து முடித்த பிறகு நாற்பது வருடங்களுக்கு முன் எழுதியதா? என்று வியக்குமளவிற்கு மிகச்சிறப்பாக இருக்கும். ஒரு ஜல்லிக்கட்டு நடக்கும் விதத்தை இவ்வளவு நேர்த்தியாக யாரும்
எழுதிவிட முடியாது. பல இடங்களில் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த நாவலின் முடிவில் நீங்கள் நிச்சயமாக ஆனந்தம் அடைவீர்கள்.
அன்புடன்
ஜேம்ஸ்
அறிமுகத்திற்கு நன்றி. நான் இன்னும் படிக்கவில்லை.
ReplyDeleteவிரிவாக எழுதியிருக்கலாமே.
நண்பரே,நீங்கள் என்னுடைய வலைப்பூவை படித்ததற்க்கு மிக்க நன்றி. நான் இப்பொழுதுதான் புத்தகங்கள் படிக்க துவங்கியிருக்கிறேன். கண்டிப்பாக நான் விரிவாக எழுதுவேன். உங்கள் முகவரி தெரிந்தால் அந்த புத்தகதின் நகலை உங்களுக்கு அனுப்பி வைப்பேன்.
ReplyDelete